மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் : நளின் பெர்னாண்டோ உறுதி

Sri Lanka Economy of Sri Lanka Nalin Fernando Value Added Tax​ (VAT)
By Beulah Jan 03, 2024 02:30 PM GMT
Report

இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நளின் பெனாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி

நுகர்வோர் உரிமைகள்

“நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும், அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் .

மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் : நளின் பெர்னாண்டோ உறுதி | Burden On People Will Be Reduced 75 Nalinfernando

வரி விதிப்பு தவறு என்று யாராவது கூறினால், அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

நாட்டிற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் இருந்து நாட்டின் எதிர்காலத்துக்காக முதலீடுகள் செய்யப்படுமானால், அதற்குத் துணை நிற்க வேண்டியது ஒட்டுமொத்த மக்களின் பொறுப்பாகும்.

நாட்டின் வருமானம் குறைவு, வரி அதிகம் என்று ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மொத்தமாக எடுத்துக்கொண்டால், எமது நாட்டில் 12% என்ற அளவிலேயே வரி வசூலிக்கப்படுகின்றது.

ஆனால் நாட்டை விட்டு வெளியேறி தொழிலுக்காகச் செல்லும் நாடுகளின் வரி சதவீதம் 38% முதல் 43% அளவில் உள்ளது.

அந்நாடுகளில் இத்தகைய வரிவிதிப்பு முறைகள் இருப்பதனால் அந்நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வெங்காய ஏற்றுமதி

வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியதால், நாட்டிற்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் வெங்காய ஏற்றுமதியை இந்தியா எளிதாக்கிய பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் : நளின் பெர்னாண்டோ உறுதி | Burden On People Will Be Reduced 75 Nalinfernando

எனினும், பெறுமதிசேர் வரி மற்றும் வரி அதிகரிப்பு தொடர்பாக எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல், ஊடகங்கள் மூலமாகவும், பல்வேறு வழிமுறைகள் மூலமாகவும் முறையற்ற வகையில் விளம்பரம் செய்வதே எமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என நம்புகின்றோம்.

இந்நிலையில் இடைத்தரகர்களும், நிறுவனங்களும் தமது விருப்பத்துக்கு விலையை உயர்த்துவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லங்கா சதொச

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், லங்கா சதொசவினால் 05 புத்தம் புதிய மெகா (mega) விற்பனை நிலையங்களையும் 10 சாதாரண லங்கா சதொச விற்பனை நிலையங்களையும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், வருட இறுதிக்குள் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பை 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் : நளின் பெர்னாண்டோ உறுதி | Burden On People Will Be Reduced 75 Nalinfernando

2024 ஆம் ஆண்டில், லங்கா சதொச நிறுவனத்தின் மொத்த வருமானத்தை சுமார் 70 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிறுவனத்தின் மொத்த இலாபம் 1.5 பில்லியன் ரூபாவாகவும், நிகர இலாபம் 500 மில்லியன் ரூபாவா வரை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு மானிய விலையில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே சதொச விற்பனை நிலைய வலையமைப்பு 500 ஆக விரிவுபடுத்தப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டில், நுகர்வோர் அதிகார சபைக்கான புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அளக்கும் அலகுகள் தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல் நான்கு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.” என்றார்.   

பிரித்தானியாவிற்கு விசா தேவையில்லை! அடுத்த மாதம் முதல் நடைமுறையாகும் புதிய திட்டம்

பிரித்தானியாவிற்கு விசா தேவையில்லை! அடுத்த மாதம் முதல் நடைமுறையாகும் புதிய திட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
நினைவஞ்சலி