சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி
புத்தளம் மீ ஓயா வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குண்டு வெடித்ததில் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த வேட்டைக்காக வைக்கப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் வெடிபொருள் ஒன்றை , வீட்டில் வளர்க்கப்படும் நாய் தனது வாயில் எடுத்துக்கொண்டு வந்த நிலையில், அதனை நிறப்பூச்சு பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் தூரிகையால் தட்டிப் பார்க்க முயன்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் காயமடைந்த இரு பெண்களும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு பெண்கள் காயம்
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய பெண் சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில்புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |