நுவரெலியா பேருந்து விபத்தில் ஒருவர் பலி
நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த காரொன்றில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்ட் CCTV கமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதியுள்ளது.
இதன்போது, வீதியோரமாக நடந்து சென்ற இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் சிக்கி, பேருந்து அவர் மீது கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி மற்றும் பெண் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சாரதி நேற்று (24.08.2026) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதியை இன்று (25.08.2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |