நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் - பொககவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்ஞர் தோட்டப் பகுதியில் இன்று காலை சுமார் 7:10 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என நோர்வூட் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மோசமான வானிலை
பொகவந்தலாவயிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போதைய நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என நோர்வூட் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |