கோர விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த பேருந்து - 71 பேர் பலி
Accident
Death
World
By Raghav
மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெராத் மாகாணத்தில் நேற்று (19.08.2025) இரவு கபூலுக்குச் சென்ற பேருந்து, லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
தீப்பற்றி எரிந்த பேருந்து
விபத்துக்குப் பின்னர் குறித்த பேருந்து தீப்பற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்.

இந்நிலையில் பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநரின் அதிகப்படியான வேகம் மற்றும் அலட்சியத்தாலே இவ் விபத்து ஏற்பட்டதாக ஹெராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி