பேருந்தை மோதித் தள்ளியது ரயில்
accident
train
bus
By Jaso
பெலியத்த நோக்கி பயணித்த சாகரிகா புகையிரதம் பேருவளை வைத்தியசாலை சந்தியில் தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்த போது பேருந்தில் சாரதி மட்டும் இருந்துள்ளார்.
பேருவளை வைத்தியசாலைச் சந்தியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பேருந்து சென்றவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பேருந்தின் ஓட்டுநர் மட்டுமே பயணித்துள்ளார்.
பேருவளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் லலித் பத்மகுமாரவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி