சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபரீதம்
police
hatton
bus
investigate
fallen
By Sumithiran
ஹட்டன் - சஞ்சிமலை பிரதான வீதியின் அன்பீல்ட் பகுதியில் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்து இன்று (08) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் - சஞ்சிமலை பிரதான வீதியில் பயணிக்கும் தனியார் பேருந்தே விபத்துக்குள்ளானது. சாரதி தனது பயணத்தை ஆரம்பிக்க பேருந்தை இயக்கிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்றவளை பேருந்தில் பயணிகள் எவரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பேருந்து பலத்த சேதமடைந்தது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி