எரிபொருள் விலை அதிகரிக்காது - பேருந்து கட்டணங்கள் குறையும்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Transport Fares In Sri Lanka
By Sumithiran
பேருந்து கட்டணங்கள் குறையும்
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் தொடர்ந்து குறையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா, தேசிய வானொலியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.அப்படியானால், பேருந்து கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
வினைத்திறனான போக்குவரத்து சேவை
சில தீர்மானங்களை மேற்கொள்வதில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மக்களுக்கு வினைத்திறனான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்துகளின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், பொதுப் போக்குவரத்திற்கு அதிகமான பயணிகளை ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி