இலங்கையை உலுக்கிய கோர விபத்து! 11 பேர் பலி - காரணத்தை வெளியிட்ட காவல்துறை
புதிய இணைப்பு
பொலன்னறுவை – மன்னம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மன்னம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்திற்கு பேருந்து சாரதியின் கவனயீனமே காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
பொலன்னறுவை – மன்னம்பிட்டி, கொட்டளி பாலத்திற்கு அருகில் சற்றுமுன் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த 40 க்கும் மேற்பட்டவர்கள் மன்னம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பொலன்னறுவை – மன்னம்பிட்டி, கொட்டளி பாலத்திற்கு அருகில் சற்றுமுன் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மன்னம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்றே கொட்டளி பாலத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில்,பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.