மேதின பேரணிகளுக்கு பேருந்துகள் : கண்டிப்பான உத்தரவு போட்ட அமைச்சர்
பணம் செலுத்தினால் மாத்திரமே மே தின பேரணிகளுக்குபேருந்துகள் விடுவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கைபோக்குவரத்து சபையின் தலைவருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பணம் செலுத்திய பின்னர்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போது, மே தின பேரணிக்காக பல்வேறு தரப்பினருக்கு பேருந்துகளை வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொது போக்குவரத்தை தடை செய்யாத வகையில் எந்தவொரு அரசியல் கட்சி, தொழிற்சங்கம் அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் பணம் செலுத்திய பின்னர் பேருந்துகளை வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கும் ஆட்சி அதிகாரத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சபை பேருந்துகள் விடுவிக்கப்பட மாட்டாது
எந்தவொரு நிறுவனத்திற்கோ பணம் செலுத்தாமல் இலங்கைபோக்குவரத்து சபை பேருந்துகள் விடுவிக்கப்பட மாட்டாது எனவும், பேருந்துகளை விடுவிப்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |