கொள்கலன் ஐஸ் : பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மேலும் மூவர் கைது
புதிய இணைப்பு
கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. சந்தேகத்திற்கிடமான கொள்கலனை ஆய்வு செய்ததில், 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |