முன்னாள் காவல்துறை மா அதிபரின் இறுதிச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்!
தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை செய்துகொண்டதாகக் கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல், திங்கட்கிழமை (20) மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
அதுவரை அவரது உடல் நாளை (19) முதல் பொரளையில் உள்ள ஒரு தனியார் மலர்சாலையில் வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபரின் உயிரிழப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணை
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய சிறப்பு உத்தரவின் பேரில், மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவு இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று (17) காலை துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |