எல்லோரையும் எந்த நாளும் ஏமாற்ற முடியாது - அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரன் பதில்
srilanka
interviews
c-v-wigneswaran
By Vasanth
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பாகும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனை வைத்து ஐ.நாவில் கதை அளப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்.
இவ்வாறான யுக்திகள் பற்றி உலக நாடுகளால் அறிந்துள்ளன. எல்லோரையும் எந்த நாளும் ஏமாற்ற முடியாதெனவும் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் குறித்த ஆணைக்குழுவிற்கு வழங்கியிருக்கும் அதிகாரங்கள் பற்றியோ அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் பற்றியோ எதுவுமே கூறப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி