அதிக விலையில் உர இறக்குமதி - நிராகரிக்கும் செயலகம்
உர இறக்குமதிக்காக அரசாங்கம் மிக அதிகப்படியான விலையைச் செலுத்தியதாக வெளியான செய்திகளை தேசிய உரச் செயலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
தேசிய உரச் செயலகம் வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது
மேலும் அந்த அறிக்கையில், கசகஸ்தானில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்யக் கோரி சில நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், அவற்றுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
யூரியா கொள்வனவு
இருப்பினும், அவ்வாறு அனுமதி பெற்ற எந்தவொரு நிறுவனமும் இதுவரை அந்த நாட்டிலிருந்து உரத்தை இறக்குமதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி ‘சிலோன் டிரேடிங் அண்ட் பிளான்டேஷன் நிறுவனம் 25,000 மெட்ரிக் டொன் யூரியாவுக்கான கொள்வனவு கட்டளையைப் பிறப்பித்த போதிலும், அந்த உரத் தொகுதி இன்னும் நாட்டிற்கு வந்து சேரவில்லை என செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கசகஸ்தானில் இருந்து ஒரு மெட்ரிக் டொன் யூரியாவை 220 முதல் 320 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய வாய்ப்பு இருந்தும், அரசாங்கம் சுமார் 800 டொலர் விலையில் உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனச் செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |