கோட்டா ஓடியபோது தப்பிய ஹிற்மான் கைது! தர்ஷனியால் சிக்கிய காவல்துறைOIC!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நேற்றைய நாடாளுமன்ற உரையில் ஜேயார் ஜெயவர்த்தனா காலத்து பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் இல்லாமல் செய்யப்படும் என அறிவித்தபோதிலும் சிறிலங்காவின் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஆட்சிக்குவரும் போது உறுதியளித்து உடனடியாகவே மறந்துவிடும் நிறைவேற்று அதிகாரமுறை எப்போது ஒழிக்கப்படும் என்பது குறித்து மூச்சுவிடவில்லை.
அநுர குடிமை உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து நேற்று வார்த்தை ஜாலங்களை எடுத்து விட்டாலும் சாவகச்சேரி உபதவிசாளரை அவரது நேரடிப்பி பிரதிநிதியான வடக்கின் ஆளுநர் அதிகார முறைகேடாக பதவி நீக்கியதான விமர்சனங்களும் இன்றைய கடையடைப்பு எதிர்ப்பு போராட்டமும் வந்துள்ளது.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் ஒரு அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் வருவதாக கடந்த சில மாதங்களாக ஆஹா ஓகோ அடிக்கப்பட்ட மாரங்கள் இப்போது பொய்த்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் முதலீடு செய்வதற்கு நிதி இல்லை என சிறிலங்கா துடுப்பாட்ட சபை கைவிரித்தமை வடக்கு தெற்கு நல்லிணக்கத்தின் புதிய பரிசாக வந்துள்ள நிலையில் இவை; உட்பட்ட விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்