மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட அக்கட்சியின் 8 உறுப்பினர்களுக்கு வரும் ஜூலை 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லங்காகனி பிரபுத்திகா உத்தரவிட்டுள்ளார்.
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருகத லியனகே அசங்க சம்பத் பீரிஸ் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கழுத்து நெரித்து மருத்துவர் கொலை - யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா செல்ல சந்தேகநபர் திட்டத்தின் பின்னணி
வர்த்தமானி அறிவித்தல்
கடந்த ஜூன் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தான் வகித்து வந்த உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தேர்தலின் போது, சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கட்சி தனக்கு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ எந்தவொரு அறிவுறுத்தலையும் வழங்கவில்லை எனவும், தான் சுயாதீனமாகவே செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை
இவ்வாறான பின்னணியில், தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி, கட்சியை விட்டு நீக்கியது அநீதியானது என அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தேர்தலின் போது கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் ஒழுக்காற்று விசாரணையில் அசங்க சம்பத் பீரிஸ் தவறிழைத்துள்ளதாக கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நீக்கம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்