சுரக்சா மாணவர் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
சுரக்சா மாணவர் காப்புறுதிக்கான ("Suraksha" Insurance) ஒப்பந்தத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Insurance) வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை சுரக்சா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டத்தை மீள நடைமுறைப்பபடுத்துவதற்கும், அதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து விலைமனுக் கோருவதற்கும் கடந்த 2024-05-06 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, இலங்கை காப்புறுதி கூட்டுத்தானத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை முன்மொழிவு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
இந்த நிலையில் 2024 / 2025, 2025 / 2026 மற்றும் 2026 / 2027 ஆகிய ஆண்டுகளுக்காக சுரக்சா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் ரூபா 6.027 பில்லியன் (பெறுமதி சேர் வரி நீங்கலாக) தொகையில் நடைமுறைப்படுத்துவதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேலே குறிப்பிடப்பட்டவகையில் 03 ஆண்டு காலத்துக்கு சுரக்சா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்
அத்துடன் சுரக்சா மாணவர் காப்புறுதியின் கீழ் வருடாந்தம் 180,000 ரூபாவுக்கு குறைவான வருமானம் கொண்ட குடும்ப மாணவர்களின் பெற்றோரின் இறப்பு நன்மைகள் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் அதிபர் மற்றும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |