அரச தலைவர் ஆணைக்குழுவிற்கு ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அழைப்பு
Srilanka
Investigation
government
President
Ranjan Ramanayake
Commission
By MKkamshan
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) அரசியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவுக்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினமும் (17) கொழும்பில் உள்ள BMICH வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்குச் சென்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களை வழங்கினார்.
அதேவேளை ரஞ்சன் ராமநாயக்க நாளையும் (19) ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.
இம்முறை சுதந்திர தினத்தில் அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்