நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்கும் இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கின்றார் மகிந்த
ஒரு கட்சியின் பிரபலம் ஆட்சி அதிகாரத்தால் அல்ல, அரசியல் செயற்பாடுகளினாலேயே தக்கவைக்கப்படுகிறது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ (Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்கள் அரசாங்கத்துடன் செயற்படுவது போன்று மக்கள் மத்தியிலும் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டை விட்டு வெளியேறும் நோக்குடன் கடவுச்சீட்டு பெற வரிசையில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் அந்த வரிசையில் இருந்தால், அவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு அழைத்து வரும் வகையில் அரசியலில் ஈடுபடுங்கள்.
அதுவே மக்களுக்காக நாம் ஆற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க எதிர்காலப் பணியாகும்.
ஒரு கட்சியின் நற்பெயரைப் பாதுகாப்பது ஆட்சி அதிகாரம் அல்ல என்றார்.