கொள்கை ரீதியான கூட்டுக்கு வாருங்கள் : தமிழரசுக்கட்சிக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு!

Sri Lankan Tamils Chandrika Kumaratunga Gajendrakumar Ponnambalam ITAK chemmani mass graves jaffna
By Sathangani Jul 20, 2025 07:24 AM GMT
Report

உள்ளூராட்சி மன்ற கதிரைகள் நிரப்பி முடிந்த நிலையில் இனியாவது மக்களுக்காக அரசியல் கூட்டை தவிர்த்து கொள்கை ரீதியான கூட்டுக்கு தமிழரசுக் கட்சி வர வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) அழைப்பு விடுத்துள்ளார்.

யாழில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடன் சமகால விடயம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என விரும்பினோம். அதற்காக பல விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொண்டோம்.

தென்னிலங்கையில் கோரம்! மனைவியின் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட கணவர்

தென்னிலங்கையில் கோரம்! மனைவியின் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட கணவர்

 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி

ஆனால் துரதிஷ்டம் தமிழரசுக்கட்சி அதனை ஏற்க அதன் நிலையில் அறுதிப் பெரும்பான்மையுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை எந்த ஒரு கட்சியும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களில் கதிரைகளுக்காக யாருடனும் சண்டை பிடித்தது கிடையாது.

தமிழரசுக் கட்சிக்கு, நீங்கள் பெரும்பான்மை பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு நாம் ஆதரவை வழங்குவோம் அதையும் தாண்டி தேவை ஏற்பட்டால் வேறு சபைகளிலும் ஆட்சி அமைக்க விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வோம் என பகிரங்கமாக கூறினோம்.

கொள்கை ரீதியான கூட்டுக்கு வாருங்கள் : தமிழரசுக்கட்சிக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு! | Call To The Itak To Enter Into A Policy Alliance

ஆனாலும் தமிழரசுக் கட்சி அதை பொருட்படுத்தாது ஒன்றிணைவுக்கு மறுத்த நிலையில் தமிழ் மக்கள் பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாம் பல சபைகளில் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தோம்.

இந்த இணைவு தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாட இருக்கின்ற நிலையில் அரசியல் நீதியான இணக்கப்பாட்டினை தாண்டி தமிழ் மக்களின் கொள்கைக்கான ஒரு இணக்கப்பாடாக தமிழரசுக் கட்சியும் இணைந்து கொள்ள வேண்டும்.

தமிழரசின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்தை நான் தேடிச் சென்று ஓராணியில் செயல்படுவதற்காகன அழைப்பை விடுத்த போது வர இருக்கின்ற ஏக்கிய ராஜ்சிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை தான் நிராகரிப்பதாக தெரிவித்தார்.

கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ள அனைத்து மாகாண செயலாளர்கள்

கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ள அனைத்து மாகாண செயலாளர்கள்

 தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு 

ஆனால் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கிய போதும் உள்ளூராட்சி மன்ற ஒற்றுமை கூட்டுக்குள் அவர்கள் வரவில்லை. அப்போது தான் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

ஏக்கிய ராஜ்ஜிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் தமிழரசு கட்சிக்கு அதிக பங்கு இருந்தது. நீங்கள் உள்ளூராட்சி இணக்கப்பாட்டில் ஏக்கிய ராஜ்யவை நிராகரிப்போம் என கூறிய நிலையில் நாங்கள் கொண்டு வந்ததை நாங்களே வேண்டாம் என கையெழுத்து இடுவதா என்ற குழப்பத்தில் நிராகரித்து இருக்கக் கூடும் என தெரிவித்தார்.

கொள்கை ரீதியான கூட்டுக்கு வாருங்கள் : தமிழரசுக்கட்சிக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு! | Call To The Itak To Enter Into A Policy Alliance

அப்போது நான் தெரிவித்தேன் சரி பரவாயில்லை இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் ஏதாவது இரகசியமான முறையில் சில விடயங்களை பாதுகாக்க வேண்டுமானாலும் அதை நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் வாருங்கள் என்றேன் வரவில்லை.

மீண்டும் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுவதற்கான காரணம் தனியாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரி ஜெனிவாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : விஜேராம வீட்டிற்கு படையெடுக்கும் மொட்டு எம்.பிக்கள்

மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : விஜேராம வீட்டிற்கு படையெடுக்கும் மொட்டு எம்.பிக்கள்

செம்மணி விவகாரம் 

ஆனால் ஜெனிவாவில் நமது பிரச்சினை குறுக்கப்பட்டு உள்ளக விசாரணையில் நீதியை பெறுவதற்கான அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றை நாம் சரி செய்ய வேண்டுமானால் எல்லோரும் ஒரணியாக நின்று எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்ட செம்மணி விவகாரம் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான ஆதாரங்களை முன்வைத்த வண்ணம் இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் 15 பேர் மட்டும் கொல்லப்பட்டதாக மூடி மறைக்கப்பட்ட செம்மணி தமிழினத்திற்கு 2009 க்கு முன்னர் இனப்படுகொலை செய்ததற்கான தொடர்ச்சியான ஆதாரங்களை தந்து கொண்டிருக்கிறது.

கொள்கை ரீதியான கூட்டுக்கு வாருங்கள் : தமிழரசுக்கட்சிக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு! | Call To The Itak To Enter Into A Policy Alliance

இந்த செம்மணி விவகாரத்தை தனியாக விட்டுச் செல்ல முடியாது யுத்தத்துக்கு பின்னர் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செம்ணியையும் இணைத்து சர்வதேச நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தமிழ் மக்களுக்காக ஓரணியில் பயணிக்கின்ற ஒரு கொள்கையின் கீழ் ஒன்றுபடக்கூடிய கட்சிகளை இணைத்து பயணிப்பதே எமது சர்வதேசத்துடனான போராட்டத்தை வலுப்படுத்தும்.

தமிழரசுக்கட்சி எம்மோடு இணைந்து பணியாற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பது தொடர்பில் வெளிப்படையாக கேட்க விரும்புகிறேன். நாங்கள் ஒரு ஆசனத்தை கொண்ட கட்சி தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற நிலையில் பலமானவர்கள் தமிழரசு கட்சி.

நாங்கள் அவர்களை மலினபடுத்த முடியாது அவ்வாறு செய்ய வேண்டிய நோக்கமும் இல்லை. ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் ஒற்றுமைக்கு வரும்போது தமிழரசு மறுப்பது ஏன்? இதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கிறது.

நல்லூர் பெருந் திருவிழா நடவடிக்கை! மாநகரசபையின் கோரிக்கை நிராகரித்த அறங்காவலர்கள்

நல்லூர் பெருந் திருவிழா நடவடிக்கை! மாநகரசபையின் கோரிக்கை நிராகரித்த அறங்காவலர்கள்

ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு

ஒன்று தமிழரசுக் கட்சி கொள்கை ரீதியில் சக தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைய மறுத்தால் அவர்களை விட்டு ஏனையவர்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பது.

அல்லது தமிழ் மக்களிடம் தமிழரசு கட்சி தொடர்பில் எமது நிலைப்பாட்டை கூறி மக்களாக அவர்களை இணைவதற்கான அழுத்தங்களை மேற்கொள்வது. இதையே நான் கூறுகிறேன் என்றால் எனது அரசியல் அறிவுக்கு எட்டிய வகையில் நாடாளுமன்றத்தில் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படப் போகிறது.

கொள்கை ரீதியான கூட்டுக்கு வாருங்கள் : தமிழரசுக்கட்சிக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு! | Call To The Itak To Enter Into A Policy Alliance

சிலர் கூறலாம் அது நிறைவேற்றப்படும் போது பார்க்கலாம் என இந்த ஆபத்து அவர்களுக்கு புரியாமல் இருக்கக்கூடும். தமிழ் கட்சிகளின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினால் போதும் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக சர்வதேச சமூகம் முன் இலங்கை அரசு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

இதனை நான் ஒருவராக நாடாளுமன்றத்தில் செய்து விட முடியாது. ஆக குறைந்தது பத்துக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்க்க வேண்டும் இல்லையேல் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் ஆபத்து உள்ளது.

ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஓரணியில் நின்றோ அல்லது எதிரணியில் நின்றோ பேசி பயன்கிட்ட போவதில்லை. ஆகவே தமிழரசு கட்சிக்கு மீண்டும் அழைப்பு விடுகிறேன் உள்ளூர் ஆட்சி மன்ற கதிரைகள் நிரப்பப்பட்டுள்ளது.

இனியாவது தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

செம்மணியில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகளின் எச்சங்கள் : மீண்டும் அகழ்வுப் பணி

செம்மணியில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகளின் எச்சங்கள் : மீண்டும் அகழ்வுப் பணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019