மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி
மெக்சிகோவில் (Mexico) தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து மெக்சிகோவின் வடக்கில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா (San Pedro Garza García ) நகரில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.
வீசிய பலத்த காற்று காரணமாக இவ்வாறு மேடை சரிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் நாடொன்றில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மீட்கும் பணி
இந்நிலையில், இடிபாடுகளில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Stage collapses during political rally in northeast Mexicopic.twitter.com/a3mti9hmFt
— Worldupdates ( Breaking ) (@itswpceo) May 23, 2024
மேடை சரிந்து விழுந்ததற்கு பலத்த காற்று காரணமென உள்ளூர் அதிகாரிகள் கூறினாலும், பாதுகாப்பு நெறிமுறைகளில் அல்லது கட்டுமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதை கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மெக்சிகோவில் வரும் ஜூன் 2 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |