இலங்கையின் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி! வெளியாகும் தகவல்கள்
இலங்கையில் (Sri Lanka) உள்ள கிராஃபைட் எனப்படும் காரீய சுரங்கங்களை இந்தியா (India) கையகப்படுத்த முயற்சித்து வருகிறது.
காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் உள்ள கிராஃபைட் எனப்படும் காரீய சுரங்கங்களை கையகப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள்
இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த சுரங்கங்களை யைகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதேவேளை, இலங்கையில் காணப்படும் கிராஃபைட் எனப்படும் காரீயம் மிகவும் தரம் வாய்ந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |