13ஐ விடவும் அதிக அதிகாரமுள்ள அரசியலமைப்பை கொண்டு வரமுடியுமா..! தமிழ் கட்சிகளிடம் கேள்வி

13th amendment Jaffna
By Sumithiran Jul 27, 2025 10:42 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

13 ஐ வேண்டாம் எனக் கூறும் தமிழ் கட்சிகள் 13-ஐ விட அதிகாரம் உள்ள ஒரு அரசியல் அமைப்பை தமிழ் மக்களுக்கு கொண்டு வருவோம் என மக்களுக்கு ஆணை வழங்க முடியுமா என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் சனிக்கிழமை தந்தை செல்வா நினைவரங்கில் இடம்பெற்ற ரெலோ அமைப்பின்தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

 தமிழ் கட்சிகளிடம் நிலையான கூட்டு இல்லாமை பாரிய சவால் 

தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகளிடத்து நிலையான ஒரு கூட்டு இல்லாமை மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

13ஐ விடவும் அதிக அதிகாரமுள்ள அரசியலமைப்பை கொண்டு வரமுடியுமா..! தமிழ் கட்சிகளிடம் கேள்வி | Can A Constitution With More Power Than The 13Th

தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் சிலர் 13 ஐ வேண்டாம் என கூறுகின்றார்கள்.

13 ஆவது திருத்த சட்டம்

நான் அரசியல் கட்சி சார்ந்தவன் அல்ல நான் ஒரு ஊடகவியலாளர். பதின்மூன்றை வேண்டாம் எனக் கூறுபவர்கள் பதின்மூன்னறில் உள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்களை பெற்று கொடுப்போம் என மக்களுக்கு உறுதி வழங்க முடியுமா?

13ஐ விடவும் அதிக அதிகாரமுள்ள அரசியலமைப்பை கொண்டு வரமுடியுமா..! தமிழ் கட்சிகளிடம் கேள்வி | Can A Constitution With More Power Than The 13Th

என்னைப் பொறுத்தவரையில் பதின்மூன்றை நிராகரிப்பவர்களால் மக்கள் முன் உறுதி வழங்க முடியாது.

பதின்மூன்றாவது திருத்தம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் அமைப்பில் இருக்கின்ற விடயம் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இன்றும் அரசியலமைப்பில் 13 இருக்கிறது அல்லாவிட்டால் வடக்கு கிழக்கு பிரிந்தது போன்று தூக்கி எறியப்பட்டிருக்கும்.

13 தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் சிலவற்றை சாதிக்கக்கூடிய அல்லது கையாளக்கூடிய அதிகாரங்கள் 13 இல் இருக்கிறது.

மாகாண சபை ஆட்சி அதிகாரத்தை சரிவர பயன்படுத்தினோமா

மாகாண சபை ஆட்சி அதிகாரம் தமிழ் தேசிய கட்சிகளிடம் இருந்த போது அதை சரிவர பயன்படுத்தினோமா இல்லை தரகு அரசியல் செய்தோம்.

13ஐ விடவும் அதிக அதிகாரமுள்ள அரசியலமைப்பை கொண்டு வரமுடியுமா..! தமிழ் கட்சிகளிடம் கேள்வி | Can A Constitution With More Power Than The 13Th

மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரம் காலத்துக்கு காலம் பறிக்கப்பட்டு வந்தது உண்மை. இருந்தாலும் இருக்கின்ற அதிகாரங்களை ஏன் நாங்கள் பயன்படுத்தவில்லை என்பதற்கு நாங்களே பொறுப்பு.

சமஸ்டி தொடர்பில் பேசுகிறோம் தற்போது உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் இடம் பெற்று சபைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் ஆட்சி மன்றங்கள் அனைத்தும் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிராகரிக்கிறோம் என யாராவது கூற முடியுமா.

ஆகவே 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு அதைவிட அதிகாரம் உள்ள திருத்தத்தை கொண்டுவர முடியுமா என சிந்திப்பதே நடைமுறை சாத்தியமான விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் : அரச தரப்பின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் : அரச தரப்பின் அறிவிப்பு

ஐ.நாவுக்கான கடித வரைபு : தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரும் கஜேந்திரகுமார்

ஐ.நாவுக்கான கடித வரைபு : தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரும் கஜேந்திரகுமார்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019