ஐ.நாவுக்கான கடித வரைபு : தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரும் கஜேந்திரகுமார்

United Nations Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam ITAK
By Sathangani Jul 27, 2025 08:34 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு (UNHRC) அடுத்த மாதமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபினை இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் (ITAK) வழங்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் உள்ளடக்கத்தில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் அவர்களின் கையொப்பத்தையும் உள்ளீர்த்து அனுப்புவதற்கு தயாராகவே உள்ளோம் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கூட்டிணைந்து ஏகமனதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) தீர்மானித்துள்ளன.

பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை! தேடிச் சென்று ஒப்படைத்த நல்லுள்ளம்

பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை! தேடிச் சென்று ஒப்படைத்த நல்லுள்ளம்

தமிழரசுக்கட்சி பங்கேற்கவில்லை

அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாக பதிலளிக்கப்பட்டிருந்தது.

ஐ.நாவுக்கான கடித வரைபு : தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரும் கஜேந்திரகுமார் | We Will Provide The Draft Letter To The Un To Itak

எனினும் எக்காரணத்துக்காக குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் கருத்து வெளியிட்ட போது, ”இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்ட வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. அவர்களுக்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் அவர்கள் தமிழ் மக்களின் அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டதொரு கட்சியாகவே உள்ளது. அந்த வகையில் அவர்களே பொறுப்புக்கூறல் விடயத்துக்கான நடவடிக்கைகளை முன்னின்று எடுத்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அந்த நடவடிக்கைகயில் அத்தரப்பினர் ஈடுபடவில்லை.

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

 பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கை

எனினும் கடந்த காலங்களில் நாம் ஒன்றிணைந்து பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளோம். ஆகவே அவர்களும் இந்தச் செயற்பாட்டில் நிச்சயமாக பங்கேற்க வேண்டும் என்பது தான் எமது நோக்கமாகும்.

ஆனால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. சில வேளைகளில் ஏனைய பல்வேறுபட்ட தரப்பினருக்கும் இருந்தமையால் வீணான முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற வகையில் அந்தச் சந்திப்பை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

ஐ.நாவுக்கான கடித வரைபு : தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரும் கஜேந்திரகுமார் | We Will Provide The Draft Letter To The Un To Itak

எனினும், நாம் வரைபினை தயாரிக்கும் பணிகளை இந்தவாரத்துக்குள் பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனை தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பி வைக்கவுள்ளோம்.

அவர்கள் வரைபின் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொண்டோ அல்லது நியாயமான முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்று கருதினாலோ அதுபற்றி கலந்துரையாடலாம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

தமிழரசுக்கட்சி வரைவினை பார்த்த பின்னர் கையொப்பமிடுவதற்கு தயாரில்லை என்றால் தமக்கு ஆணை வழங்கிய தரப்பினருக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியேற்படும். அது அவர்களுடைய விடயமாகும்.

எம்மைப்பொறுத்தவரையில் தமிழர் தேசத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இணைத்துக்கொண்டு இச்செயற்பாட்டில் முன்செல்வதற்கே முனைகின்றோம்”  என தெரிவித்தார்.

நீதிக்காக தமிழரின் கண்ணீர் முழக்கம்! செம்மணி படுகொலைக்குக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்

நீதிக்காக தமிழரின் கண்ணீர் முழக்கம்! செம்மணி படுகொலைக்குக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026