இலங்கை மட்டும் தப்ப முடியுமா? அரசாங்கம் கேள்வி
உலகின் மிகவும் உயர்தர சுகாதார வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் உலக நாடுகளில் கூட டெல்டா கொரோனா வைரஸானது சூறாவளி போன்று ஆக்கிரமித்துள்ள நிலையில், இலங்கை மட்டும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இது எந்த அரசாங்கத்தையும் பாதிக்கப்படக்கூடிய ஒரு தொற்றுநோய் என்பதால் யாரும் நிலைமையை அரசியலாக்க வேண்டாம் என தெரிவித்தார். இது எதிர்பார்க்காத நிகழ்வொன்று.
அத்துடன் யார் ஆட்சியில் இருந்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியாது. இதனை எதிர் தரப்பினர் அரசியல் ஆக்கி விளையாடுவது நியாமற்றது என அவர் தெரிவித்தார். கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த பொது மக்கள் தடுப்பூசி போடுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக நாளாந்தம் இயற்கை அல்லது செயற்கை முறையில் விற்றமின் – C எடுக்க வேண்டும். அத்துடன் சீனி உள்ளடக்காத சூடான தேநீர் அல்லது கொத்தமல்லி பானம் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.