உங்கள் ஆட்சியில் முட்டை கூட வாங்கமுடியவில்லை : புடினுக்கு நேரே கூறிய முதியவரால் பரபரப்பு
உங்கள் ஆட்சியில் ஒரு முட்டை மற்றும் கோழி இறைச்சி கூட வாங்க முடியவில்லை என ரஷ்ய அதிபர் புடினின் முகத்திற்கு நேராக முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக ரஷ்யா பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை
மேலும் அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடையால் பல நாடுகளும் ரஷ்யாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களில் முட்டை விலை ரஷ்யாவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆண்டு இறுதியில் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் மக்களின் கேள்விக்கு ஊடகங்கள் முன்னிலையில் பதில் அளிப்பதை புடின் வழக்கமாக கொண்டுள்ளார்.
முட்டை, கோழி இறைச்சி கூட விலை உயர்ந்து
அவ்வாறாக இந்த ஆண்டிற்கான பொதுமக்கள் கேள்வி பதில் கூட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர், நாட்டில் முட்டை, கோழி இறைச்சி கூட விலை உயர்ந்து விட்டதாகவும், சாமானியர்கள் முட்டை வாங்கவே சிரமப்பட வேண்டியது உள்ளதாகவும் தனது வேதனையை பேசியுள்ளார்.
அதற்கு அதிபர் புடின் ”நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசு பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு நல்ல சூழ்நிலை உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |