உக்ரைனுக்கு ஆதரவாக கவச வாகனங்களை வழங்கியுள்ள கனடா
கனடாவின்(Canada) தேசிய பாதுகாப்புத் துறை, உக்ரைனின் பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு அளிக்கும் பணியின் கீழ் முதல் தொகுதி LAV (Light Armored Vehicles) கவச வாகனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை கனேடிய ஆயுதப்படை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த கவச வாகனங்கள், ஜேர்மனியில் வாகன இயக்கத்திற்கும் பராமரிப்பு முறைகளுக்கும் பயிற்சி பெற்ற பிறகு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாகனங்கள்
குறிப்பாக, இந்த வாகனங்களில் 'அம்புலன்ஸ்' பதிப்பு உக்ரைனின் பாதுகாப்பு முயற்சிகளில் முக்கிய பங்கை வகிக்குமென கனேடிய ஆயுதப்படை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உக்ரைனின் நிதியமைச்சர் செர்ஹி மார்சென்கோ, அக்டோபர் 11ஆம் திகதி கனடா அரசுடன் 400 மில்லியன் கனடிய டொலர்கள் (சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) கடனுக்கு நான்காவது கூடுதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Following the operator and maintenance training on the ACSV, ambulance variant, in Germany, the vehicles were loaded up and sent to Ukraine.
— CAF with Ukraine (@CAFwithUkraine) October 26, 2024
These vehicles will help Ukraine in their ongoing defence of an unlawful invasion to their land #SlavaUkraini pic.twitter.com/tibGiSfgxX
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |