கனடா சந்தைகளில் இருந்து உடனடியாக மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்
கனடாவின்(canada) சந்தைகளில் உள்ள பொருளொன்றில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக குறித்த உணவுப்பொருள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பொருள் மீள பெற்று கொள்ளப்படுவதை கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்
ராணா பண்டக்குறியைக் கொண்ட வெள்ளை கோழி மற்றும் காளான் சோர்ஸ் பெஸ்டா வகை உணவுப்பொருட்களே மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிஸ்ட்டீரியா தொற்று
இந்த உணவுப் பொருளில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த உணவுப் பொருட்கள் சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பொருளை உட்கொள்வதனால் வாந்தி, தலைசுற்றல், காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து வலி போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |