பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகள் : கனடா பிரதமரின் அறிவிப்பு
கனடாவில் பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுக்காக மதிய உணவு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நேற்றிலிருந்து (2.4.2024) இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும்
நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று தெரிவித்துள்ளார்.
கனடா பள்ளிகளில் கூடுதலாக, 400,000 பிள்ளைகளுக்கு சத்துள்ள மதிய உணவு வழங்க, கனடா அரசு முடிவு செய்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பை கனடா பிரதமரும், நிதியமைச்சர் Chrystia Freelandம் வெளியிட்டார்கள்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று (2.4.2024) "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
PM Justin Trudeau just announced the new National School Food Program to ensure kids, especially vulnerable kids, have access to healthy meals. Learn how this program will help take pressure off of families and help kids reach their full potential: https://t.co/dpRvljgf0l pic.twitter.com/rr9LZh042C
— CanadianPM (@CanadianPM) April 1, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |