கனடாவின் புலம்பெயர்தல் தொடர்பில் அரசின் திட்டம்: மாறுபட்ட கருத்தில் கனடா வங்கி
கனடாவில் (Canada) புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எனினும், கனடா வங்கியானது புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், 2025, 26ஆம் ஆண்டு காலகட்டத்தில், வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி வீதம், மொத்தத்திலேயே 2 சதவிகிதம் மட்டுமே குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்வோர் எண்ணிக்கை
இதற்கு முன்னர் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் (non-permanent residents or NPRs) எண்ணிக்கையை, மக்கள்தொகையில் 6.2 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (Immigration, Refugees and Citizenship Canada or IRCC) அறிவித்திருந்தது.
இதற்கு மாறாக ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவிகிதமாக இருந்ததாக கூறும் கனடா வங்கி, அந்த வீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனவே, அரசு அறிவித்த 5 சதவிகிதத்தை அடைய கூடுதல் காலம் பிடிக்கும் என்றும் கனடா வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |