ஆபத்தில் சிக்கிய இலங்கை குடும்பத்துக்கு புகலிடமளித்தது கனடா
canada
srilankan family
political asylum
By Sumithiran
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் ஸ்னோவ்டனிற்கு ஹொங்கொங்கில் தங்கள் குடியிருப்பில் அடைக்கலம் வழங்கி நாடு கடத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கைக் குடும்பத்திற்கு கனேடிய அரசாங்கம் புகலிடம் அளித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த சுபுன் திலின கெலெபத்த டில்றுக்சி நொரிஸ் தம்பதியினருக்கும் அவர்களது இரண்டு பிள்ளைகளிற்குமே கனடா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய பின்னர் ஸ்னோவ்டன் தலைமறைவாகயிருந்த நிலையில் அவருக்கு இலங்கைக் குடும்பம் அடைக்கலம் வழங்கியது. இதையடுத்து, அவர்கள் ஹொங்கொங்கில் தங்கள் ஆரம்பகட்ட அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு கனடா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.