கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள்..!
கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனேடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் வேலை வாய்ப்பு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளத தகவலிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.5 வீதம் என்ற அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இந்த நிலைமை பேணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாய்ப்பு
மேலும், கல்வித்துறையில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பகுதிநேர வேலை வாய்ப்புகளே அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, சனத்தொகை அதிகரிப்பு வலுவான நிலையில் காணப்படுவதனால் மாதாந்தம் தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.