கனடாவில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்! தமிழருக்கும் பல கோடி
கனடாவில் 10 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
அதில் மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த சந்திரௌதயன் செல்லத்துரை என்ற தமிழரும் இடம்பிடித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஒன்றாறியோவைச் சேர்ந்தவர் அவாடிஸ் ஜம்ஜியான்.
லொட்டரி விளையாட்டு
இவர் தலைமையில் 10 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் லொட்டரி விளையாட்டில் சேர்ந்து ஈடுபடுவதை கடந்த 4 ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு மேக்ஸ் மில்லியன்ஸ் லொட்டரி பரிசாக $500,000 (இலங்கை மதிப்பில் ரூ. 13,54,02,969.50) விழுந்துள்ளது. இதன்மூலம் சந்திரௌதயன் செல்லத்துரை என்பவருக்கும் பெரிய தொகை கிடைத்துள்ளது.
பரிசு பணத்தை வைத்து குடும்பத்தாருடன் கியூபாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவாடிஸ் ஜம்ஜியான் கூறியுள்ள நிலையில், மற்றவர்கள் தங்கள் வெற்றிகளின் பங்கில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 21 மணி நேரம் முன்
