கனடாவில் படுகொலை செய்யப்பட்ட தந்தை: இலங்கையிலிருந்து மகளின் உருக்கமான பதிவு
கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான காமினி அமரகோனின் மனைவி மற்றும் மகள் இறுதிச் சடங்குக்காக இலங்கையில் இருந்து பதிவு செய்யப்பட்ட செய்தியை அனுப்பியிருந்தனர்.
கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் இறுதிக் கிரியைகள் நேற்று (17) பிற்பகல் 1 மணி அளவில் இடம்பெற்றது.
கடந்த மார்ச் 6 ஆம் திகதி கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையர்கள் படுகொலை
இந்த சம்பவத்தில் தாய் - தர்ஷனி பண்டாரநாயக்க 35 வயது, இனுக விக்ரமசிங்க - 07 வயது, அஸ்வினி விக்ரமசிங்க - 04 வயது, றின்யானா விக்ரமசிங்க - 02 வயது, கெலீ விக்ரமசிங்க - 02 மாதங்கள் காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதலில் தனுஷ்க விக்கிரமசிங்க உயிர் தப்பியுள்ளதுடன், அவர் குடும்பத்தினருடன் இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த இறுதிசடங்கில் உயிரிழந்த காமினி அமரகோனின் 11 வயது மகள் ஆஷேரி அமரகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறுதிக் கிரியைகள்
"என் அப்பாவைப் பற்றி நான் சொல்ல வேண்டும், அவர் எங்கள் அனைவருக்கும் சிறந்த தந்தையாகவும், என் அம்மாவுக்கு நல்ல கணவராகவும் இருந்தார். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். கடவுள் ஆசீர்வதிப்பார்."
காமினி அமரகோனின் மனைவி திஷானி பெர்னாண்டோ,
"மன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதற்கு. ஆனால் மகள்கள் ஆஷேரி மற்றும் கெய்லியுடன் நான் எப்போதும் உன்னுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருப்பேன். நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம். நீங்கள் இல்லாமல் எங்களுக்கு பாழடைந்த வாழ்க்கையே அமையும்.'' என தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட 19 வயதான இலங்கை மாணவர், காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |