கோட்டாபயவை கைது செய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் அதிரடி..!

Government of Canada Gotabaya Rajapaksa Sri Lankan Peoples
By Kiruththikan May 19, 2023 03:41 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடா கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவைகைதுசெய்யவேண்டும், அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனப்படுகொலை - யுத்தகுற்றங்கள்

கோட்டாபயவை கைது செய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் அதிரடி..! | Canada Requests To Arrest Gotabaya Rajapaksa

இலங்கை யுத்தத்தில் சிக்குண்டதால் இலங்கையில் தமிழ்மக்களும் ஏனைய சமூக குழுக்களும் 25 வருடங்களாக கற்பனை செய்ய முடியாத துயரங்களில் சிக்குண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தசாப்த கால வன்முறையும் அழிவும் எண்ணிக்கையற்ற இலங்கையர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் அமைதியையும் சுதந்திரத்தையும் தவிர வேறு எதனையும் வேண்டாத ஆயிரக்கணக்கான தமிழர்கள் மோதலின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை நாங்கள் கௌரவிக்கின்றோம், கொல்லப்பட்ட பாதிக்கப்ட்ட அறிந்தவர்கள் அறியாதவர்களை, இலங்கையின் வரலாறில் இருண்ட யுகத்தில் இனப்படுகொலை யுத்தகுற்றங்கள் அநீதிகளால் பாதி;க்கபட்டவர்களை நாங்கள் நினைவுகூறுகின்றோம் எனவும் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களின் காயங்களை எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்ப்பதில் உலகிற்கு தலைமைதாங்கிய கனடாவின் முன்னையை கென்சவேர்ட்டிவ் அரசாங்கங்களை தற்போதைய அரசாங்கம் பின்பற்றவேண்டும்,

ராஜபக்ச அரசாங்கம் இழைத்த இனப்படுகொலை மற்றும் ஏனைய கண்டித்தக்க குற்றங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 இல் பொதுநலவாய உச்சிமாநாட்டை கனடா புறக்கணித்தது,ஏனைய நாடுகளும் இதனை பின்பற்றி ராஜபக்ச ஆட்சியாளர்களை புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தியது உலகம் தமிழ் மக்களிற்கு ஆதரவாக நின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறுமாறு கென்சவேர்ட்டிவ்கள் இன்று வேண்டுகோள் விடுக்கின்றனர்,குறிப்பாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என்ற இலங்கையின் மனித உரிமை பரப்புரையாளர்களின் வேண்டுகோள்களுடன் நாங்கள் இணைந்துகொள்கின்றோம் இதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்