கனடாவில் மற்றுமொரு மனிதப்புதைகுழி கண்டுபிடிப்பு
canada-unmarked-graves-discovered
By Vanan
கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பியாவை தொடர்ந்து சஸ்காஜ்ஜுவன் மாகாணத்திலும் அடையாளப்படுத்தப்படாத மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள பழங்குடியின குழுவொன்று கூறியுள்ளது.
முன்னர் தங்கி கல்வி கற்கும் பாடசாலையாக செயற்பட்ட பகுதியிலேயே இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கௌவ்சிஸ் ஃபெஸ்ட் நேஷன்ஸ் என்ற குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த மனித புதைகுழியானது கனடாவில் இன்று வரையான காலப் பகுதியில் கண்டறியப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க கணிசமான மனித எச்சங்களை கொண்டுள்ளதாக அந்தக் குழு கூறியுள்ளது.