ட்ரம்பிற்கு எதிரான முதல் படியில் கனேடியர்கள் வெற்றி!!
ஒரு மகத்தான தேர்தல் போரில் வெற்றி பெற்ற பிறகு, தனது வெற்றி உரையில், கனேடிய பிரதமராகத் தொடரவிருக்கும் மார்க் கார்னி (Mark Carney), அமெரிக்காவை (US) கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சகாப்தம் முடிந்துவிட்டதாக அதன்போது அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சீற்றமடைந்துள்ள கனேடியர்கள்
கனடாவிற்கு செழிப்பைக் கொண்டு வந்த அமெரிக்காவுடனான தங்கள் பழைய உறவு முடிந்துவிட்டதாகவும் கனடாவுக்கு வேறு பல வழிகள் உள்ளதாகவும் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
LIVE: Thank you, Canada • EN DIRECT : Merci Canada https://t.co/E4uJHXmF1c
— Mark Carney (@MarkJCarney) April 29, 2025
அத்துடன், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை கனடா வெகுவாகக் குறைக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்கள் நெருங்கிய கூட்டாளியின் துரோகத்தால் சீற்றமடைந்துள்ள கனேடியர்கள் கனடாவை வலிமையாக்குவதில் உறுதியாக உள்ளது தற்போதைய தேர்தல் மூலம் புலப்பட்டுள்ளது.
அமெரிக்க துரோகம்
அதில் முதல் படியாக ட்ரம்பை எதிர்த்து நிற்பது மட்டுமல்லாமல், அவர் எடுக்கும் எந்தவொரு எதிர்கால முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடிப்பதற்காக தீர்க்கமான ஆணையைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தேடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் தனது வெற்றி உரையில் பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்க துரோகத்தின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீண்டுவிட்டோம்.
ஆனால் நாம் ஒருபோதும் கற்றுக் கொண்டுள்ள பாடங்களை மறந்துவிடக் கூடாது. இதை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்லப் போகிறோம், நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்.” என தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
