கனடா பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல்
Justin Trudeau
Canada
By Jaso
கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ மற்றும் கியூபெக் மாகாய முதல்வர் பிரான்சுவா லெகால்ட் இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீதான வழக்கு விசாரணையில் தான் கொலை அச்சுறுத்தல் விடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக
மேற்படி இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக 30 வயதான ஜெர்மெய்ன் லீமெய் என்ற நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐந்து குற்றச்சாட்டுக்கள்
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் லீமெய் மீது சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் செப்ரெம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |