2023 இல் எயார் கனடா விமானசேவைக்கு ஏற்பட்டநிலை
Canada
By Sumithiran
மிகவும் மோசமான விமான சேவை நிறுவனமாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிரிகும் என்ற வான் போக்குவரத்து ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு வட அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் பத்து பெரிய விமான சேவை நிறுவனங்களில் எயார் கனடா நிறுவனம் மிக மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வீதமான விமானங்கள் மட்டுமே
இந்த எயார் கனடா நிறுவனத்தின் 63 வீதமான விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பேணப்படாத நேர முகாமைத்துவம்
சுமார் 140000 விமானங்கள் கடந்த ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டதாகவும், நேர முகாமைத்துவம் பேணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |