மீண்டும் கனடாவை சீண்டும் இந்தியா : கனடா தூதர்களை மீளழைக்க காலக்கெடு விதிப்பு
இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைக்குமாறு கனடாவிடம் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதற்காக எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பகையே உருவாகியது.
முதலில், நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றச்சாட்டியிருந்தார்.
10-ஆம் திகதி வரை காலக்கெடு
நிஜ்ஜார் கொலையில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார், இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது, இதனால் இரு நாட்டுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் கனடாவில் இருந்து இந்திய தூதரை கனடா அரசு வெளியேற்றியதும், அதற்கு பதிலடியாக இந்தியா கனடா நாட்டு தூதரை வெளியேற்றியதுமாக பகை பலத்தது.
இதற்கிடையே இப்போது இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தி, அதற்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலக்கெடுவும் விதித்துள்ளது.
இதனால், இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகளை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடமாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எதிர்வரும் 10 ஆம் திகதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்றட்டும் என கனடா அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது தொடர்பில் இந்திய அரசு இதுவரையில் எந்தவொரு செய்தியையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.