தமிழர் இனப்படுகொலை: கனடிய பிரதமரிடம் இருந்து பறந்த அறிவிப்பு
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச முயற்சிகளை கனடா (Canada) தொடர்ந்து ஆதரிக்கும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கனடாவில் செயற்படும் தமிழ் அமைப்பு ஒன்றுக்கு எழுத்திய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வம்சாவளி
தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் கனடா ஆதரிப்பதாகவும் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அளித்து வரும் பங்களிப்புகளை கனடிய அரசாங்கம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் பதவி வகித்த இரண்டாவது இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சராக அவரது மரபு குறித்தும் நான் பெருமைப்படுகிறேன் என பிரதமர் சட்டிக்காட்டியுள்ளார்.
இனப்படுகொலை
அத்தோடு, தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை நோக்கிய உண்மை மற்றும் நீதிக்கான அழுத்தத்திற்கு சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினரின் வெறுப்பை எதிர்க்கிறோம் அந்த வகையில், வணிக மற்றும் சமூகத் தலைவர்களாக இருந்து, எங்கள் சமூகத்தின் துடிப்பை மேம்படுத்துவது வரை கனடா வாழ் ஈழத்தமிழர்கள் நாட்டிற்கு செய்யும் மகத்தான பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
