இருப்பிடங்களில் இருந்து வெளியேற துடிக்கும் கனடா மக்கள்
கனடாவில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்து வருவதாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அங்குஸ் ரீட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலமே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காட்டுத் தீயினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை

காட்டுத் தீயினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் புதிய இடங்களை நோக்கி மக்கள் செல்ல தீர்மானித்துள்ளனர்.
குறிப்பாக 35 வயதுக்கும் குறைந்த பெண்களே தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
காட்டுத் தீயிலிருந்து தப்ப

கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் சுமார் 237 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து தப்பி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.