கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கனடாவில் (Canada) சொக்லேட் உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய உணவு பரிசோதனை முகவம் (CFIA) வெளியிட்ட தேசிய மீளப்பெறல் அறிவிப்பில், இரு வகை சொக்லேட் பொருட்களை பயன்படுத்த, விற்க மற்றும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொக்லேட் வகைகள்
அந்த வகையில், 180 கிராம் எடையுடைய டோனி சொகலோனி டார்க் சொக்லேட் ஆல்மன்ட் சீ சால்ட் பார்கள். (Tony’s Chocolonely Dark Chocolate Almond Sea Salt bars)
அத்துடன், 180 கிராம் எடையுடைய டோனி சொகலோனி எவிரிதிங் பார்கள் (Tony’s Chocolonely Everything Bars) என்பனவே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து முகவர் நிறுவனமும் (FDA) இதே சொக்லேட் வகைகளுக்கு மீளப்பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
