கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து

Sri Lanka Sri Lankan Schools Teachers
By Shalini Balachandran Oct 03, 2024 05:52 PM GMT
Report

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களினை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை (writ) மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுத்தாக்கலை இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த பெர்னாண்டோ உட்பட பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்கள் முன்வைத்திருந்தனர்.

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

இடமாற்றக் கொள்கை

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விடயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து | Cancellation Of Annual Teacher Transfers In East

இதனடிப்படையில், இது குறித்த வழக்கு இன்று ( 03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபை சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை இரத்து செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்திற்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு

ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு

இடமாற்றம் இரத்து 

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கைத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினதும் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து | Cancellation Of Annual Teacher Transfers In East

அத்தோடு, அவர்களுக்குரிய உத்தியோகபூர்வக் கடிதங்களை எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி அளித்திருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் சட்டத்தரணிகளான றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப். எச். ஏ. அம்ஜாட் ஆகியோர் தோன்றி காத்திரமான வாதங்களை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு

தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026