ஜெனிவா ஊடாக எம்மை முடக்க முடியாது..! சிறிலங்கா அரசாங்கம் பகிரங்க எச்சரிக்கை
உலக நாடுகள் எமக்கு உதவும். எனவே, ஜெனிவா ஊடாக எம்மை முடக்கலாம் என்ற முயற்சி கைகூடாது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்றைய தினம் இடபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன
தொடர்ந்து கருத்துரைத்த அவர், '' இந்த ஆட்சியை கொண்டு செல்ல முடியாது எனக் கூறியவர்கள் தான், பொருளாதார விவகாரம் தொடர்பிலும் ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கூட முன்னாள், இந்நாள் அதிபர்களின் உத்தரவின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எமது அரசாங்கம் ஜனநாயக ஆட்சி முறையை பின்பற்றுகிறது. அந்த வகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எமக்கு உதவும். எனவே, ஜெனிவா ஊடாக எம்மை முடக்கலாம் என்ற முயற்சி கைகூடாது ", எனக் குறிப்பிட்டார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 4 மணி நேரம் முன்
