கேப்டன் விஜயகாந்த் மௌனித்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவு!
புகழ்பெற்ற நடிகரும், தமிழகத்தின் தே.தி.மு.க கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (28.12.2025) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனையொட்டி, சென்னை, கோயம்பேடு பிரதேசத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நினைவுநாள்
அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பதிவில் 'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள். ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர்.” என குறிப்பிட்டுள்ளார்.
'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 28, 2025
ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். pic.twitter.com/2EEMvo9sfd
தே.தி.மு.க தலைவரான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |