கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயம்!
Kilinochchi
Sri Lanka
Accident
By Shalini Balachandran
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மகிழுந்து (கார்) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி