10 ஆண்டுகளில் உலகில் 100 கோடி மனித உருவ ரோபோக்கள்
அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் தனது சமூக வலைதள காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது, அவற்றின் வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத வேகத்தை எட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
அதே போன்று ஒரு ரோபோவின் செயல்திறன் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எலான் மாஸ்க் கணித்துள்ளார்.
ELON MUSK: A billion humanoid robots will be more productive than all humans combined within 10 years.
— DogeDesigner (@cb_doge) September 1, 2026
“There will be at least a billion robots in 10 years, and each will produce at least five times the output of a human.” pic.twitter.com/4N6etC48L5
ஒரு வருடத்திற்குள் அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மனிதனின் அறிவாற்றல் திறன்களை விஞ்சிவிடும் என்றும் இந்த தசாப்தத்தின் முடிவில் மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த நுண்ணறிவையும் மிஞ்சிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17