யாழில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து: 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதம்
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது மோதியதில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாண நகரப் பகுதியிலிருந்து தீவகம் நோக்கிப் பயணித்த கார், பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதன்போது, பண்ணை கடற்கரைப் பூங்காவிற்கு வருகை தந்தவர்கள் வீதியோரத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது கார் மோதியுள்ளது.
10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன.

காரின் சில்லொன்றில் திடீரென காற்று வெளியேறியதால் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |