ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம்
அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடியின் ஒரு பகுதி, ஏலத்தில் 4,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த தலைமுடி கண்ணாடிச் சட்டகத்தில் பாதுகாக்கப்பட்ட நிலையில் ஏலத்தில் வைக்கப்பட்டதாகவும், கடந்த 21.11.2026 இந்த ஏல விற்பனை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தலைமுடி முதலில் ஜோன் காட்ஸ்பி என்பவருக்குச் சொந்தமானதாகும். 1799ஆம் ஆண்டு ஜோர்ஜ் வாஷிங்டன் உயிரிழப்பதற்குச் சில காலத்திற்கு முன்னர், காட்ஸ்பி அவருக்கு தனது இல்லத்தில் விருந்தளித்திருந்தார்.
ரிச்மண்ட் ஏல நிறுவனம்
பின்னர், காட்ஸ்பியின் வழித்தோன்றல் ஒருவரிடமிருந்து சேகரிப்பாளரான ஜோன் கே. லாட்டிமர் இந்தத் தலைமுடியைப் பெற்றுக்கொண்டதாக ஏலத்தை ஏற்பாடு செய்த ரிச்மண்ட் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், தற்போது ஏலத்தில் இதனை வாங்கியவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 2021ஆம் ஆண்டு ஜோர்ஜ் வாஷிங்டனுடையவை என நம்பப்படும் மூன்று தலைமுடித் துண்டுகள், அவரது மரண காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டு பதக்கமொன்றில் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 40,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
வர்ஜீனியா மாநிலத்தின் அலெக்ஸாண்ட்ரியா பகுதியில் வசித்த ஜோன் காட்ஸ்பி, வாஷிங்டனுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகவே இந்தத் தலைமுடியைப் பெற்றுக்கொண்டதாக அவரது பேத்தி ஜூலியா டென் ஐக் மெக்பிளேர் 1928ஆம் ஆண்டு எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தலைமுடி கண்ணாடிச் சட்டகத்தில் பொருத்தப்பட்டு, அவர்களது குடும்ப வீட்டில் ஜோர்ஜ் வாஷிங்டனின் உருவப்படத்திற்குக் கீழே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |